மாணவனின் உயிரை பறித்த தலாவ பேருந்து விபத்து: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அனுராதபுரத்தில் விபத்திற்குள்ளான பேருந்தினுடைய சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை தம்புத்தேகம நீதவான் காயத்ரி ஹெட்டியாராச்சி பிறப்பித்துள்ளார்.
அனுராதபுரம், தலாவ ஜெயகங்கா சந்தி பகுதியில் கடந்த பத்தாம் திகதி பாரிய பேருந்து விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
பேருந்தின் சாரதி
இந்தநிலையில், விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த பின்னணியில், பேருந்து சாரதியை வரும் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, பேருந்து நடத்துனரை இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இணையான சாலை
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய தம்புத்தேகம காவல்துறை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், பேருந்து சாரதி கவனக்குறைவாகவும் மற்றும் பொறுப்பற்ற முறையிலும் வாகனம் ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், பேருந்துடன் மோதவிருந்த சாலையில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாதியை காப்பாற்ற முயன்ற போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக பேருந்து சாரதியின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சாரதியின் திறமையால்தான் ஜெயகங்கா சந்திக்கு இணையான சாலையில் பயணித்த பேருந்து, தண்ணீர் நிரம்பிய இடத்தை நோக்கி உருள விடாமல் காப்பாற்றப்பட்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போக்குவரத்துப் பிரிவு
அத்தோடு, பேருந்து சாரதி குடிபோதையில் இல்லை என்பதாலும் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனுபவம் வாய்ந்த சாரதி என்பதாலும் அவரை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கருத்தில் கொண்டு பேருந்து சாரதியை விடுவிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதவான் நிராகரித்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பேருந்தின் நடத்துனர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம காவல்துறை போக்குவரத்துப் பிரிவிற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |