சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகர... புதிய தவிசாளர் குறித்து வெளியான தகவல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Thulsi
வெலிகம பிரதேச சபையில் சமகி ஜன பலவேகயவின் (SJB) வெற்றிடமான உறுப்பினர் பதவிக்கு சமீர தனுஷ்க டி சில்வாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர (Lasantha Wickramasekara) அண்மையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் சமீர தனுஷ்க டி சில்வா என்பவர் வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கடந்த 22 ஆம் திகதி அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தானை அதிர வைத்த குண்டுவெடிப்புக்கள்...! இலங்கையின் பாதுகாப்பு குறித்து அரசு விளக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி