இந்தியா - பாகிஸ்தானை அதிர வைத்த குண்டுவெடிப்புக்கள்...! இலங்கையின் பாதுகாப்பு குறித்து அரசு விளக்கம்
இந்தியா (India) மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதுடன் அவை தீவிரவாத தாக்குதல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி, செங்கோட்டைப் பகுதியில் நேற்று (10.11.2025) இரவு கார் வெடித்து சிதறிய சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என டெல்லி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதாரி வைத்தியர் ஒருவர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள்
இதேவேளை நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுவதால், நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுகின்றன.

நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் காவல்துறையினர், தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துகின்றனர்.
எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |