வெளிநாட்டைச் சேர்ந்த ஆசிரியர் கட்டுநாயக்காவில் கைது
வெளிநாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாடியன் நாட்டு பிரஜையான 31 வயதுடைய ஆசிரியரே கைது செய்யப்பட்டவராவார்.இவர் சவுதியில் அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியராவார்.
போலி கனேடிய கடவுச்சீட்டில் கட்டுநாயக்காவில் தரையிறங்கி இங்கிலாந்துக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கனேடிய கடவுச்சீட்டில்

சனிக்கிழமை மாலை கட்டார் தோஹாவிலிருந்து வந்த இவரின் ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள் அதில் சந்தேகமடைந்து அவற்றை முதன்மை குடிவரவு அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்போது தனது கடவுச்சீட்டை சகோதரர் தயாரித்து கொடுத்ததாக அவர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரை கைது செய்த அதிகாரிகள் அவர் வருகை தந்த இடமான தோஹாவிற்கே நாடு கடத்த கட்டார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.