இஸ்ரேலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் விபரம் வெளியாகியது
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் விபரங்களை நாடு ரீதியாக தொகுத்துள்ளது AFP செய்தி நிறுவனம்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகளவில் உள்ளனர்.
பலரை காணவில்லை
அத்துடன் இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்களை காணவில்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,
அமெரிக்கா: 27 பேர் பலி தாய்லாந்து: 24 பேர் பலி பிரான்ஸ்: 15 பேர் பலி நேபாளம்: 10 பேர் பலி ஆர்ஜன்ரீனா: ஏழு பேர் பலி உக்ரைன்: ஏழு பேர் பலி ரஷ்யா: நான்கு பேர் பலி இங்கிலாந்து: நான்கு பேர் பலி சிலி: நான்கு பேர் பலி ஆஸ்திரியா: மூன்று பேர் பலி பெலாரஸ்: மூன்று பேர் பலி கனடா: மூவர் பலி சீனா: மூன்று பேர் பலி பிலிப்பைன்ஸ்: மூவர் பலி பிரேசில்: மூன்று பேர் பலி பெரு: இருவர் பலி ருமேனியா: இருவர் பலி அவுஸ்திரேலியா, அஜர்பைஜான், கம்போடியா, அயர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கொலம்பியா, பராகுவே: ஒருவர் பலி
ஜெர்மனி, மெக்சிகோ: பல பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டனர்
இத்தாலி, பராகுவே, இலங்கை, தான்சானியா: பலரை காணவில்லை.