பிரித்தானியாவுக்கு சீனாவின் இரகசியங்களை உளவு பார்த்த நபர் கைது! விசாரணையில் வெளிவந்த தகவல்
சீனாவின் உளவு அமைப்பான எம்.எஸ்.எஸ் இல் பணியாற்றி இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ 6 அமைப்புக்காக நீண்ட காலம் உளவு பார்த்த நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எம்.எஸ்.எஸ் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த ஹுவாங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு முதல் ஹுவாங், எம்.ஐ.6 அமைப்புக்காக உளவு வேலைகளில் ஈடுபட தொடங்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொழில்முறை உளவு சாதனங்கள்
அதில் சீனாவில் உளவு வேலை செய்வதற்கும் பல்வேறு சக்தி வாய்ந்த அமைப்புகளை அடையாளம் கண்டு தெரிவிக்கும்படியும், இங்கிலாந்து அமைப்பு அவரை சீனாவுக்கு பல முறை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், எம்.ஐ.6 அமைப்பு அவரிடம் இருந்து உளவு தகவல் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்று கொண்டு அதற்கு பதிலாக, உளவு பார்ப்பதற்கான பயிற்சிகளை அளித்தத்துடன், தொழில்முறை உளவு சாதனங்களையும் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தகவல்களை வெளியிடவில்லை
சீனாவின் பல்வேறு தேசிய ரகசியங்கள் உள்பட 17 உளவு தகவல்களை பிரித்தானியாவிற்கு ஹுவாங் அளித்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
தவிரவும், சட்டத்திற்கு உட்பட்டு சொந்த நாட்டில் இருந்து கொண்டு, தூதரக உதவியை ஹுவாங் பெறுவதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹுவாங்கின் முழு பெயர், பாலினம் அல்லது எந்த நாட்டை சேர்ந்தவர் அல்லது அவர் பணியாற்றிய நிறுவனத்தின் அடையாளம் உள்ளிட்ட தகவல்களை எம்.எஸ்.எஸ். இன்னமும் வெளியிடாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |