வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் தொடர்பில் வெளியானது அறிவித்தல்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு புதிய சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இந்த நடைமுறை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன் பிரகாரம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிய சுற்றுலாப் பயணிகளும் ஏனைய தரப்பினரும் நாட்டில் முன்னெடுக்கப்படும் முதலாவது பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிடத்து அவர்கள் அடுத்து வரும் 7 நாட்களுக்குள் இரண்டாவது பரிசோதனை செய்வது அவசியமாகும்.
எனினும் பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இலங்கைக்கு வருகைதருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 72 மணி நேரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையிலும் அவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிப்பட்டிருக்க வேண்டும் என்று சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.