திடீரென இலங்கைக்கு வர காரணம் என்ன? பிரித்தானியாவின் செல்வந்தர் வெளியிட்ட தகவல்
கடந்த 12 ஆம் திகதி திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் செல்வந்தரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) தனது இலங்கை விஜயம் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
electronics உற்பத்தி இடமாக்க இலங்கையின் பொருத்தத்தைப் பற்றி அறிய இந்த பயணத்தை முடித்தேன்.
அந்த பயணத்திலிருந்து திரும்பிய நான் இலங்கை அரசாங்கத்தையும், கோவிட் -19 தொற்றுநோய்க்கான பதிலையும், நான் சந்தித்த வணிக வாய்ப்புகளையும் கண்டு வியப்படைந்தேன். இலங்கை ஒரு சிறந்த எதிர்காலம் கொண்ட உண்மையான ரத்தினம்” என அவர் பதிவிட்டார்..
மாலைதீவு சுற்றுப்பயணத்தை முடித்த அவர் சமீபத்தில் தனது ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வந்தார். இவர் சர்வதேச அளவிலான வணிகங்களை வைத்திருக்கிறார்.
இந்த விஜயம் வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் இது வணிக நோக்கங்களுக்காக என்றும் கூறப்படுகிறது.
you may like this