மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்
Batticaloa
Sri Lankan Peoples
By Dilakshan
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்.
தனது 86 வது வயதில் இன்று (19.09) வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை கடமையாற்றியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவு
1939.03.20 ஆம் திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
