யாழில் துரதிஷ்ட வசமாக மரணமடைந்த பட்டதாரி இளைஞன்! இறுதியில் வெளியான காரணம்
யாழில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் பதிவாகியுள்ளது.
மானிப்பாய் - சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடல் சுகயீனம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு 14ஆம் திகதியில் இருந்து உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதற்கு மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஏழாலை - மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் குறித்த இளைஞன் பூஜை செய்வதற்காக இன்று காலை சென்ற போது அங்கு அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் அதனை தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
மரணத்திற்கு காரணம்
பின்னர் உறவினர்கள் அங்கே சென்று பார்த்தவேளை குறித்த இளைஞன் அசைவற்று காணப்பட்ட நிலையில், அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அதன்படி, நுரையீரலில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
