அநுரவின் முதலீட்டு ஆவணங்கள் திருடப்பட்டப்பட்டன! வாக்குமூல முரணில் சிக்கிய துசித
அநுரவின் முதலீட்டு ஆவணங்கள் தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ (Thusitha Halloluwa) அவ்வப்போது அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு (Colombo) குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
துசித ஹலோலுவ, நீதிமன்றத்தை தவிர்த்து வந்த இவர் நேற்று (19) காலை கைது செய்யப்பட்டார்.
பிடியாணை
கொழும்பு நீதவான் நீதிமன்றம் 18 ஆம் திகதி அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், துசித ஹலோலுவ அவ்வப்போது அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
துசித ஹலோலுவவிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் கோப்பில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிரேக்கத்தில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் ரூபாய் 1.4 மில்லியன் முதலீடு செய்திருப்பது குறித்த முக்கியமான தகவல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தித்துள்ளார்.
இருப்பினும், இதுவரை நடந்த எந்தவொரு விசாரணையிலும் அத்தகைய கோப்பு திருடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
