முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இன்று தனது 5 வருட சிறைத்தண்டனைக்காக சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
பிரான்ஸின் வரலாற்றில் முன்னாள் அரச தலைவர் ஒருவர் சிறையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில் சார்க்கோசி அதிகாரப்பூர்வமாக சிறைக்கு செல்வதற்கு முன்னர் அவரது வதிவிடத்தில் வைத்து அவரது பிள்ளைகள் அவரை சந்தித்துள்ளனர்.
விடுதலைக்கான கோரிக்கை
காலை பத்து மணியளவில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவரது விடுதலைக்கான கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சிறையில் இருந்த ஏனைய கைதிகள் சார்கோசியை வரவேற்பதாக அறைகளில் இருந்து கூச்சலிட்டுள்ள்ளனர்.
இதற்கிடையே சார்க்கோசியை சிறைக்குச் சென்று தான் பார்வையடப் போவதாக நீதியமைச்சர் ஜெரால்ட் டார்மனா குறிப்பிட்டமை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என அரச வழக்குத்தொடுனர் பணியகம் எச்சரித்துள்ளது.
தேர்தல் பரப்புரை
மேலும், சார்க்கோசி தனது தேர்தல் பரப்புரைகளுக்காக லிபியாவில் கேர்ணல் கடாபிய ஆட்சியில் இருந்தபோது அவரிடம் இருந்து முறைகேடான முறையில் நிதிபெற்றதான குற்றச்சாட்டில் கடுமையான தண்டனைக்குரிய தீர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த தீர்பை எதிர்த்து சார்க்கோசி மேன்முறையீடு செய்தாலும் இந்த மேன்முறையீட்டு வழங்கு விசாரணக்குகு எடுக்கபடும் வரை அவர் சிறையில் இருக்கவேண்டும் என முன்னைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதால் அவர் சிறைக்குச்சென்றுள்ளார்.
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை சார்க்கோசியை தனது எலிசே மாளிகைக்கு அழைத்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன் அவருக்கு ஆறுதல் கூறியவிடயமும் வெளிவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
