வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்!
Court
SriLanka
Avant Garde
Nisanga Commander
By Chanakyan
அவன்கார்ட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் இருந்து அவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸங்க சேனாதிபதி உட்பட பிரதிவாதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 8 பேரையும் நிரபராதிபதிகளாக கருதிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் காலி துறைமுகத்திற்கு அருகில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்திச் சென்றமை, அனுமதியின்றி ஆயுதங்கள் மற்றும் ரவைகளை வைத்திருந்தமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு விஷேட நீதியாய நீதிமன்றத்தில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த 8 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்