முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மகிழ்ச்சியின் உச்சத்தில்
அரசியலில் இருந்து விலகி சட்டத்தரணியாக பணியை தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி(ali sabry) தெரிவித்துள்ளார்.
தாம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவில்லை எனவும், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு அமைச்சராக கடமையாற்றியதாகவும், தனிப்பட்ட இலாபத்திற்காக அல்ல எனவும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அரசியலை விட அழகான வாழ்க்கை
தற்போது தாம் நடத்தும் வாழ்க்கை அரசியலை விட அழகாக இருப்பதாக தான் கருதுவதாக தெரிவித்த அலிசப்ரி, வெளிநாட்டு ஆலோசகர் பதவிகளுக்கு தமக்கு கோரிக்கைகள் வந்தாலும் இலங்கையை விட்டு செல்லமாட்டேன் எனவும் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotabaya rajapaksa) நெருக்கமானவராக செயற்பட்டதாக கூறப்பட்ட அலி சப்ரி அவரின் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஜனாதிபதியாக பதவியேற்றபோதிலும் அவரின் அமைச்சுப் பதவி மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |