ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் அதிரடி கைது!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
FCID - Financial Crimes Investigation Division
By Dilakshan
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைக்கேடு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சதோசாவுக்குச் சொந்தமான லாரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மேலதிக விசாரணைகளில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்