முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு
By Dhilak
முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர்களுக்குச் சொந்தமான, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தே அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை (19) அவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாய்
55 வயதுடைய தேஷானி குணரத்ன என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் தனமல்விலவில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரியவருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்