முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கடுங்காவல் சிறை
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முக்கிய வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.
தேசிய லொட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்தது.
வழக்கு விசாரணை
சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
தேசிய லொட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, 2006ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்