இது தேசத்துரோகமே அல்ல - கோட்டாபய அரசுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் அமைச்சர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதன்மூலம் இலங்கை துறைமுக ஆணையம் புதிய சகாப்தத்தில் நுழைவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிித்துள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படுவது தேசத்துரோகமே அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
ஒருநாட்டை அபிவிருத்தி செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதாலேயே வியட்நாம்,கம்போடியா, போன்ற சோசலிச நாடுகள் கூட இத்தகைய கூட்டு முதலீடுகளைத் தொடங்கியுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்துசெயற்படுவதற்கான நல்லாட்சி அரசின் 2015 ஆண்டுக்கான முயற்சியை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.