இந்தியாவுடனான நெருக்கம் சீனாவை எதிரியாக்கும் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இந்தியாவுடன் (india)ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவிற்கு(china) எதிரான செயற்பாடு எனவும் இது இலங்கைக்கு எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன(channa jayasumana) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஆசியாவின் நேட்டோ
‘‘இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2007ஆம் ஆண்டு முதல் கொட் எனும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இந்த அமைப்பானது உலகில், ஆசியாவின் நேட்டோ என்ற முறையிலேயே நோக்கப்படுகிறது. இது சீனாவுக்கு ஆதரவான நாடுகளுக்கெதிராக ஆசிய பசுபிக் வலயத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
நாங்கள் அறிந்தவரை சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை இலங்கை அரசு எந்தவொரு நாட்டுடனும் இதுபோன்ற பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டதில்லை.
சீனாவை எதிரி நாடாக்கிக்கொள்கிறோம்
இந்நிலையில், அரசால் இதுவரை அறிவிக்கப்படாத பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் நாம் இந்தியாவுடன் இணைகின்றோம் என்றால் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சீனா மீதான யுத்தச் சூழ்நிலைக்கு நாமும் ஒத்துழைக்கிறோமென்றே கருதவேண்டியுள்ளது. இதன்மூலம் நாம் சீனாவை எதிரி நாடாக்கிக்கொள்கிறோம்’’ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
