முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 40 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் ஒய்வுபெற்ற தபால் அதிபர் முருகேசு சண்முகம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது.
இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன், தமிழுணர்வும் ஈழத்தமிழர் கல்வி உரிமையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
குறித்த நினைவஞ்சலியில், வி.தர்மலிங்கத்தின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








