மீட்கப்பட்ட தங்க துப்பாக்கி விவகாரம் - துமிந்த திசாநாயக்க மருத்துவமனையில் அனுமதி
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) இன்று (24.05.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
அவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி (Bambalapitiya) பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருந்த போது, முன்னாள் அமைச்சர் நேற்று காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு - ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
முதலாம் இணைப்பு
அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இதுவரை இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
