உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணியின் கணவர் கைது
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் இன்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் வாக்குமூலம் பதிவு
இதேவேளை, முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |