பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் டுபாயில் காலமானார்.
நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 79 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
உடல்நலக்குறைவு
சுதந்திரத்திற்கு முன்பு 1943 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த பெர்வேஸ் முஷாரப், தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது.
1964 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.
நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999 ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றிய அவர், இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் நாடாளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார்.
2001 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சினைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்