ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனை சந்தித்தார் மைத்திரி
யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அதிபரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்களை இன்றையதினம் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்றையதினம் ஐ.பி.சி தமிழ் யாழ்ப்பாண கலையகத்தில் இடம்பெற்றது.
சந்திப்பு

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில், தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகள் மற்றும் சமகாலத்தில் தமிழர் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்கள் தொடர்பில் கந்தையா பாஸ்கரன் அவர்கள் முன்னாள் அதிபர் மைத்திரியிடம் எடுத்துரைத்துள்ளார்.
தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் முன்னாள் அதிபரின் ஆதரவு தேவை என கந்தையா பாஸ்கரன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்