இறுதிக்காலத்தில் சுரேஷ் சலே..! இரு கண்களும் தானம் - கண்ணீர் விட்ட தேரர்
மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ள விடங்களை நினைக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது என்று மொட்டு கட்சியில் அங்கம் வகிக்கும் தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கெக்கிரா நகரத்தில் மொட்டு கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுரேஷின் மனைவியும் மகனும் அவரைப் பார்க்கச் சென்றபோது 'நான் எனது இறுதிக்காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.
இரு கண்களையும் தானம்
நான் இந்த நாட்டை நேசித்தேன். இன்றும் இந்த நாட்டை நேசிக்கிறேன். எனது இரு கண்களையும் தானம் செய்வதற்காக நான் எழுதி வைத்துள்ளேன்.

எனவே அதனை அவ்வாறே செய்யுமாறு அரசாங்கத்திடம் கூறுங்கள்' என்று சுரேஷ் கூறியுள்ளார்.
தனது கண்களை இறுதியாக தானம் செய்ய அவர் தீர்மானித்துள்ளார். இவ்வாறே அவர் தாய்நாட்டிற்கு சேவை செய்தார். அப்படிப்பட்ட சுரேஷ் சாலேயை வைத்துக்கொண்டு இந்த அரசாங்கம் நாடகம் ஆடுகிறது.
தோற்கடித்த பின்னரே மறுவேலை
இந்த நாடகங்கள் அனைத்தும் வேறு எதற்கும் அல்ல மஹிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதற்கான வழியொன்றைத் தேடுகிறார்கள்.

இப்போது சுரேஷை வெளியே விடுவது கடினம் என்று. அவர் வெளியே வந்தால் இவர்களின் முகத்திரை கிழிந்துவிடும் அதனால் தான் இவர்கள் இப்போது பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் இந்த நாட்டிற்குச் செய்யும் சாபத்திற்கு எதிராக நாங்கள் மட்டுமல்லாமல் மக்களும் கிடைக்கின்ற முதல் தேர்தலிலேயே உங்களைத் தோற்கடித்த பின்னரே மறுவேலை பார்ப்போம் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 11 மணி நேரம் முன்