சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் வீரர் அடித்துக் கொலை
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் வீரர் ஒருவர் அடித்து கொலை செய்ப்பட்டுள்ளார்.
தெம்புவன பேகமுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்தவராவார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 8 இலட்சம் ரூபாவை இரண்டு பேரிடம் மோசடி செய்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகநபர் ஒருவர் கைது
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இருவர், வேறு ஒருவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்