இலங்கை தமிழர்களுக்காக முன்னின்று செயற்பட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் அமைச்சர் காலமானார்
Srilanka
former-south-african-minister
By S P Thas
இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான விடயங்களில் செயற்பட்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.
இந்தநிலையில் இப்ராஹிமின் மறைவு குறித்து உலக தமிழர் பேரவை தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வைத் தேடும் முயற்சியின் ஒரு கட்டமாக இப்ராஹிம் 1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்திருந்தார்.
அதேநேரம் இலங்கையின் தமிழ் தரப்பு தொடர்பான விடயங்களில் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் தீவிரமாக செயற்பட்டதாக உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்