தாய்லாந்து முன்னாள் பிரதமர் நாளை விடுதலை!
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக தக்சின் ஷினவத்ராவுக்கு 2023 ஆகஸ்ட் மாதம் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தக்சின் ஷினவத்ரா கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.
நாளை விடுதலை
ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக தமக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதை அறிந்த அவர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த பின்னர் 15 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து விட்டு கடந்த(2023) ஆண்டு தக்சின் ஷினவத்ரா நாடு திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் மாதம் பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், உடல்நலக் குறைவு காரணமாக அவர் பாங்காக் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ஓராண்டாகக் தாய்லாந்து மாமன்னர் மகா வஜிராலாங்கோர்ன் குறைத்தார்.
எனவே, 74 வயதான தக்சின் ஷினவத்ரா நாளை(17) விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |