யாழில் கடற்றொழிலுக்கு சென்ற 04 கடற்றொழிலாளர்கள் மாயம்
Missing Persons
Jaffna
Sri Lanka Fisherman
By Jaso
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தொிவித்தனர்.
நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த கடற்றொழிலாளர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான காற்று
அந்த பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதனால் அவர்கள் பயணித்த படகுகளுக்கு கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகளில் பிரதேச கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்