விமான நிலையத்தில்மனித மண்டையோடுகள் - கொடூர நகரில் இருந்து அனுப்பப்பட்ட அதிர்ச்சி
மெக்சிகோ விமான நிலையத்தில் அமெரிக்காவிற்கு செல்லும் தபால் பொதிகளை எக்ஸ்-ரே மூலம் ஸ்கேன் செய்து கொண்டு இருந்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
மத்திய மெக்சிகோவில் உள்ள குவெரேடாரோ இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொதியில் மண்டை ஓடுகள், பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத் தாளில் சுற்றப்பட்டு இருந்துள்ளது.
இந்த மண்டை ஓடுகள் மெக்ஸிகோ நாட்டில் கொடூர நகரம் என்று அழைக்கப்படும் மைக்கோவாகன் என்ற மேற்குக் கடலோர மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
நான்கு மனித மண்டை ஓடுகள்
#IEWorld | The skulls were found wrapped in aluminum foil inside a cardboard box at Queretaro Intercontinental Airport in central Mexico, a statement from the National Guard said.https://t.co/Os1xbmOPQl
— The Indian Express (@IndianExpress) December 31, 2022
பொதிகளை எக்ஸ்-ரே செய்யும்போது ஒரு பொதியில் விநோதனமாக ஏதோ இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
மண்டை ஓடுகள் போல் இருந்துள்ளதால் சந்தேகப்பட்டு அந்த பொதியை பிரித்துள்ளனர்.
அட்டை பெட்டிக்குள் நான்கு மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கரோலினா
மெக்ஸிகோவின் மைக்கோவாகன் மாநிலத்தில் மனித வதைகளும், குற்றங்களும் அதிகம் நடக்கும் என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் கிடைத்த மண்டை ஓடுகளின் வயது, பாலினம், வயது போன்ற விபரங்களை காவல் துறை வெளியிடவில்லை. மேலும் இது அமெரிக்காவின் தென் கரோலினாவின் மானிங்கில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட இருந்தது.
இது மருத்துவ ஆய்வு, மாந்திரீகம், என்று எதற்காக அனுப்பப்பட இருந்தது என்ற காரணமும் சரியாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.