யாழில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயம்
யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்வம் நேற்று(23.03.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முரண்பாடு
இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உடுவில் - மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கும் பெண்ணின் உறவினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு உள்ளே சென்ற நபர் புகையிலை வெட்டும் கத்தியை எடுத்து வந்து மூவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதலில் பெண் வீட்டை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் மற்றையவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் அவர்களும் குறித்த நபர் மீது மேற்கொண்ட தாக்குதலில் கறித்த பெண்ணின் கணவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |