கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : நீதிமன்றின் உத்தரவு
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களையும் தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (12) கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து நான்கு ஜமைக்கா பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் மற்றும் பல்பொருள் அங்காடி வளாகம் ஒன்றில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 48 வயதுடைய இரண்டு ஆண் சந்தேக நபர்களும், 43 மற்றும் 52 வயதுடைய இரண்டு பெண் சந்தேக நபர்களும் ஆவர்.
சந்தேகநபர்களை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |