ஆரம்ப பிரிவைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கொரோனா
corona
students
primary-section
By Sumithiran
ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரவி அபேரத்ன(Dr. Ravi Abeyratne) இன்று (4) தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் இருவர் இதற்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி ஏனைய மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவதாக அதிபர் தெரிவித்தார்.