யாழில் நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
அதன்போது, அதே இடத்தைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் என்ற நான்கு வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணை
இன்று திங்கட்கிழமை (10) காலை குழந்தை வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடிய போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணை மேற்கொண்டார்.
சம்பவம் குறித்து நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்