500 ரூபாய் இலஞ்சம் பெற்ற காவல்துறையினருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை!
ஐந்நூறு ரூபாய் இலஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதியிடம் காவல்துறை உத்தியோகஸ்தர் 500 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
விசாரணை
இந்நிலையில் போக்குவரத்து பிரதி காவல்துறை மா அதிபரின் அறிவிப்பின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அதன் பிறகு நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நான்கு குற்றச்சாட்டுக்களிலும் காவல்துறை உத்தியோகஸ்தர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி 20,000 ரூபாய் அபராதமும் மற்றும் இலஞ்சமாக பெற்ற 500 ரூபாவை திருப்பிக்கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |