நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Colombo Jaffna Kandy Sri Lanka 2022 Lanka Premier League
By Sathangani Jul 30, 2023 05:07 AM GMT
Report

தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த மூன்றாவது தொடரில் வெற்றி வாகை சூடிய ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

5 அணிகள் 

நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் | Fourth Lanka Premier League Cricket Series Begins

24 போட்டிகள் கொண்ட நான்கவாது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ள ஓரா, கோல் டைட்டன்ஸ், பீ லவ் கண்டி ஆகிய 5 அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.

12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், மேலும் 8 ஆரம்ப சுற்றுப் போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இறுதி சுற்றின் மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கிரிக்கெட் வெற்றிக்கிண்ணம் 

நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் | Fourth Lanka Premier League Cricket Series Begins

இவ்வருடத்திற்கான வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (28)கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இவ்வருட வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் எல்.பி.எல் கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய போத்தல்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2,523 அலுமினிய போத்தல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கிண்ணம் உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

எல்.பி.எல் போட்டியின் பிரமாண்ட ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025