வெளிநாடு செல்வோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானம்
covid
vaccine
foreign travelers
By Vanan
வெளிநாடு செல்வோருக்கு மாத்திரம் நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிசெய்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி பெற்று ஒரு மாதத்தின் பின்னர் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Booster தடுப்பூசியாக வழங்கப்படும் பைசர் (Pfizer) தடுப்பூசியே நான்காவது தடுப்பூசியாகவும் வழங்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
அத்தோடு வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தககது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்