இறுக்கமான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரான்ஸ்
கொரோனாவின் டெல்டா திரிபைவிட ஒமிக்ரோன் திரிபு 70 மடங்கு வேகமாகப் பெருகும் தன்மையுடன் பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகள் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா விதிகளை கடுமையாக்கியுள்ளன.
குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்குரிய புதிய இறுக்கமான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை பதிவு செய்யப்படாத உச்சக்கட்ட தொற்றுப்பதிவாக கடந்த 24 மணி நேரத்தில் 78,610 தொற்றுகளும் 165 மரணங்களும் பதிவாகியுள்ளன.
புதிய விதிகளின்படி பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணம் செய்ய முன்னர் கொரோனா தொற்று பரிசோனையை செய்வதற்குரிய காலப்பகுதிய இதுவரை 48 மணிநேரமாக இருந்த நிலையில் அது தற்போது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்குள் வருவோர் தமக்குரிய பயணத்திற்கான காரணங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் இருந்து திரும்பும் பிரெஞ்சு குடிமக்கள் அல்லது பிரான்சில் வசிக்கும் பிரித்தானியக் குடிமக்கள் மட்டுமே பிரான்சுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சுற்றுலா அல்லது வணிகம் நோக்கங்களுக்குரிய பயணம் மட்டுப்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.