காசா படுகொலைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவர் : பிரான்சிற்குள் நுழைய தடை
காசா(Gaza) படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை(Britain) சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள்(France) நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லண்டனிலிருந்து(London) பிரான்சின் சார்ல்ஸ் டி கோல் விமானநிலையத்திற்கு(Paris Charles de Gaulle Airport) சென்ற மருத்துவர் கசான் அபு சிட்டாவிடம்(Ghassan Abu-Sittah) அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கு ஜேர்மனி(Germany) தடைவிதித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் மருத்துவர் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு ஜேர்மனியின் அதிகாரிகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜேர்மனியின் நடவடிக்கை
ஜேர்மனியின் இந்த நடவடிக்கை காரணமாக மருத்துவர் ஷெங்கன் நாடுகளிற்கு பயணம் செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு “நான் பிரான்ஸ் செனெட்டில் உரையாற்றவேண்டும் ஆனால் என்னை பிரான்சிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை” என மருத்துவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |