பிரான்ஸை அச்சுறுத்தும் மூட்டைப்பூச்சிகள்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்திலும், அந்நாட்டின் பிற நகரங்களிலும் மூட்டைப்பூச்சிகள் அதிகளவில் படையெடுத்துள்ளன.
இது, பூச்சிகள் குறித்த பரவலான வெறுப்பையும் பயத்தையும் உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும்
இதனால், அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஓகஸ்ட் வரை பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது உடல்நலம் மற்றும் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தின் பிற்பகுதியில், மூட்டைப்பூச்சிகள் பெருமளவில் அதிகரிப்பது காணப்படும் எனக் கூறுகிறார் மார்செய் நகரத்தின் பிரதான மருத்துவமனையின் பூச்சியியல் நிபுணரான ழான்-மிஷெல் பெராஞ்ஜே.
ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் பொதுவாக மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். அவர்களது பைகள் மற்றும் பெட்டிகளில் மூட்டைப்பூச்சிகள் ஒட்டிக்கொண்டு பிரான்ஸ் நாட்டுக்குள் வருகின்றன.
இப்படி வரும் பூச்சிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் இருந்ததைவிட அதிகமாக உள்ளது என அவர கூறுகிறார்.
இந்த விடயம் பிரான்ஸ் அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாகவும் மாறியிருக்கிறது.