இஸ்ரேலுக்கான விமானங்களை அதிரடியாக இரத்து செய்த முக்கிய நாடு
ஈரான் (Iran) உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு (Israel) இயக்கப்படும் விமானங்களை இரத்து செய்வதாக பிரான்ஸ் (France) அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஜூலை 14 ஆம் திகதி வரை விமானம் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்கப்படும் விமானங்கள்
மேலும் தெரிவித்த அவர், “லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு இயக்கப்படும் விமானங்கள் ஜூன் 25 வரை இரத்து செய்யப்படுகின்றன.
இதேபோன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ஜூலை 14 ஆம் திகதி வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விமானங்கள்
இதோடு மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபை, செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களையும் (இரு மார்க்கத்திலும்) ஜூன் 24 வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபின்லாந்தின் பின்னர் விமான நிறுவனமும் கத்தாருக்கு இயக்கும் விமானங்களை இரத்து செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, துபாய்க்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் கடந்த 22 ஆம் திகதி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
