பிரான்ஸில் வெடித்த கலவரம்: பகுதி நேர ஊரடங்கு
பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி நடைமுறையில் மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் நீண்ட நேர வகுப்புகள் போன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளதால் பிரான்ஸ் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
2400 பேர் கைது
கலவர சம்பவத்தை தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக, பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை நாடு முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |