பிரான்ஸில் வசிப்போருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
France
Weather
By pavan
பிரான்ஸின் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, Paris, Hauts-de-Seine, Seine-Saint-Denis மற்றும் Val-de-Marne ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சுக்குள் கடந்த மே மாதத்தில் இருந்து மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாலும், அதிக வெப்பம் நிலவுவதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது கட்ட எச்சரிக்கை
அதன்படி நான்குவரையுள்ள எச்சரிக்கை பிரிவுகளில் இது முதலாவது கட்ட எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நீரில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுக்கள், வாகனங்கள் கழுவுதல் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் விடுதல் போன்றவற்றை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
