பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்!
பிரான்சில் நாந் நகருக்கு அருகிலுள்ள லா சப்பல் சூ எர்டிரே என்ற இடத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பொலிஸ் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை நடத்தியவர் ஆயுதப்படையினரால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படை வாத தாக்குதல்களில் அடிக்கடி பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ள பிரான்சில் நாந் நகருக்கு அருகிலுள்ள லா சப்பல் சூ எர்டிரே என்ற இடத்தில் இன்று பகல் இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்தப்பகுதியில் கடமையில் இருந்த நகராட்சி பொலிஸ் பெண் அதிகாரி மீது முதலில் கத்திக்குத்து தாக்குதலை நடத்தி காயப்படுத்திய பின்னர் பின்னர் தாக்குதலாளி என்டியாகா டயே அங்கிருந்து தப்பியோடியிருந்தார்.
இதன்பின்னர் குறித்த தாக்குதலாளியை கைதுசெய்வதற்கென 200 க்கு மேற்பட்ட ஆயுதப்படையினர் கொண்ட அணிகள் உலங்குவானுர்திகள் சகிதம் தமது தேடுதல் வேட்டையை நடத்தியபோது சந்தேகநபர் அகப்பட்டிருந்தார்.
ஆயுதப்படையினர் அவரைக் கைது செய்ய முனைந்தபோது அவர் படையினரிக் துப்பாக்கியை பறித்து தாக்குதலை நடத்தியதால் ஆயுதப்படையினர் காயமடைந்திருந்தனர்.
படையினர் திருப்பித் தாக்கியதில் சந்தேக நபரும் கயர் படுகாயப்படுத்தப்பட்டிருந்தார். அவரது நிலைமை ஆபத்தாக இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது.
தாக்குதலாளி என்டியாகா டயே ஏற்கனவே பொலிஸாரால் இஸ்லாமிய அடிப்படைவாத ஆர்வலராக பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.