பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் பிரதமர்
corona
face mask
Jean Castex
By Shalini
பிரான்சில் சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.
மேலும் இந்த நல்ல செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
பிரான்சில் இரவு நேர ஊடங்கு வரும் ஜூன் 20 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எதிர்பார்த்ததை விட பத்து நாட்களுக்கு முன்னதாகவே நீக்கப்படுகின்றது. இனிமேல் ஊரடங்கு இல்லை.
அதேவேளை, முகக்கவசம் அணிவதும் இன்று முதல் கட்டாயமில்லை. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உண்டு.
நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்கள் போன்ற இடங்களில் மாத்திரம் முகக்கவசம் அணியவேண்டும் என பிரதமர் Jean Castex குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி