பிரித்தானிய உள்துறை அமைச்சரை சீற்றத்துக்குள்ளாக்கிய பிரான்ஸின் நடவடிக்கை
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகலால் தமது நாட்டை பழிவாங்க பிரான்ஸ் குடியேறிகளை அனுமதிப்பதாக பிரித்தானியா கருதும்நிலையில் நேற்று பிரான்ஸ் கரையில் இருந்து சுமார் 1,000 பேர் ஆங்கிலக்காய்வாயை படகுகள் மூலம் கடந்து பிரித்தானியா கரைகளை வந்தடைந்தமை பிரித்தானியா உள்துறை அமைச்சர் பிரிதி பட்டேலை சீற்றப்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த ஆண்டில் இதுவரை 23,000 க்கும் மேற்பட்ட மக்கள் படகுகள் மூலம். பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் அதியுச்ச பதிவாக 1,000 க்கும் மேற்பட்டவர்கள் ஆங்கிலக்காய்வாயை கடந்து பிரித்தானிய கரைகளை வந்தடைந்தமை பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலை சீற்றப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று காலை ஒரு அறிக்கையிடலை செய்த அவர், சிறிய படகுகளில் குடியேறிகள் இவ்வாறு பெருந்தொகையில் ஆங்கிலகால்வாயை சட்டவிரோதமாக கடக்கும் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விரோத குடியேறிகளை சமாளிக்க தமது தரப்பு பிரித்தானியாவுக்கு நிதி உதவி வழங்கிய போதிலும் இதனைத் தடுக்க பிரெஞ்சு தரப்பில் போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறும் நிலையில் பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளே இந்த பயணங்களை ஊக்குவிப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளி நாடான பெலாரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்துக்கும் இடையில் குடியேறிகள் மற்றும் அகதிகளை முன்னுறுத்திய மிகப்பெரிய முறுகல் தொடர்வது குறிப்பிடத்தக்கது