வவுனியாவில் தேர்தல் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு! விசாரணை ஆரம்பம்
Election Commission of Sri Lanka
Vavuniya
Sri Lanka
Sri Lanka Parliament Election 2024
By Harrish
நடைபெற்று முடிந்த தேர்தல்களின் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முறைகேடு தொடர்பில் விசாரணை
இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்