காதலர் தினத்தில் மோசடி! நாளை அல்லது நாளை மறுதினம் தொடர்பில் விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கைத்தொலைபேசிகளுக்கு அல்லது சமூக ஊடக கணக்குகளுக்கு நாளை (13) அல்லது நாளை மறுநாள் (14) போலியான குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.
நாளை அல்லது 14 ஆம் திகதி உங்கள் தொலைபேசியிலோ அல்லது உங்கள் சமூக ஊடகக் கணக்கிலோ “உங்கள் காதலன் அல்லது காதலி உங்களுக்கு ஒரு பரிசை அனுப்பியுள்ளதாகவும், அதைப் பெற பணத்தை வைப்பிலிட வேண்டும்” என்று உங்களுக்கு குறுஞ்செய்தி வரலாம். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியும்.
மேலும் இதுபோன்ற செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்று இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற செய்தியை நீங்கள் பெற்றவுடன், பணம் கொடுக்க வேண்டாம், நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள். வரும் 2 நாட்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.
அத்துடன் சைபர் கிரைம் நபர்களைப் பற்றிய தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.