சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியான மகிழ்ச்சி தகவல்
சர்வதேச ரீதியில் இன்றைய தினம் (01) சிறுவர் தினம் (Children's Day) கொண்டாடப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்தநிலையில்,சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் திணைக்களத்தினூடாக (National Zoological Department) விசேட நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் தினம்
இதனடிப்படையில், 12 வயதுக்கு கீழ்ப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்றைய தினம் மிருகக்காட்சிசாலையை பார்வையிட வரும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் அம்பாந்தோட்டை ரிதிகம சபாரி பூங்கா ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
