இலவசக் கல்வி அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு பொருந்தாது : பேராசிரியர் கடும் தாக்கு
புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தயாராகும் நாடாளுமன்றத்தில் உள்ள எவரும் தங்கள் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கத் தயாராக இல்லை என்று பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அmவர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலைகளிலோ அல்லது சர்வதேசப் பாடசாலைகளிலோ படிக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு பொருந்தாது
இலவசக் கல்வி அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு பொருந்தாது..கல்வியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

பல பல்கலைக்கழக பேராசிரியர்களின் பிள்ளைகள் கூட அரசுப் பள்ளிகளுக்குச் செல்வதில்லை.அனைத்து வசதிகளுடன் கூடிய தேசிய பாடசாலைகளுக்கு செல்பவர்கள் என்றும் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம வலியுறுத்துகிறார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த மாநாட்டில் உரையாற்றும் போது பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |